“அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்.”
அயோத்திதாசரின் உரைநடை, தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு அந்த நோக்கில் அயோத்திதாசரின் உரைநடை என்ற தலைப்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டும்.
– சென்னையும் அதன் தமிழும் என்று ஓராண்டுக்கு முன், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக நான் (இந்திரன்) நடத்திய கருத்தரங்கத்தில் பேரா. எம்.ரமேஷ் கட்டுரையிலிருந்து. . .
நன்றி: கலை விமர்சகர் இந்திரன் முகநூல் பதிவு