நனவோடை நாவல் எழுதுவது எப்படி?

கலை விமர்சகர் இந்திரன்

”உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்” என்று சொன்ன விர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf (1882–1941) என்னைக் கவர்ந்த பெண் நாவலாசிரியர். நனவோடை உத்தி முறையில் கதை சொல்வதின் முன்னோடி எழுத்தாளர் இவர்.

தமிழில் நனவோடை உத்தி முறையை பிரக்ஞைபூர்வமாக கையாண்டவர் நகுலன் என்றுதான் நான் நினைக்கிறேன்.

விர்ஜீனியா உல்ஃபின் “கலங்கரை விளக்கம் To the Lighthouse (1927)“ “திருமதி டேலோவே (Mrs. Dalloway (1925) and எனும் நாவல்களில் புதிய கதை சொல்லும் முறையைக் கொண்டு வந்தார்.

கதாபாத்திரங்களின் புற வாழ்க்கையை விவரிப்பதின் மூலமாக கதாபாத்திரங்களை வளர்த்தெடுத்த ஒரு கால கட்டத்தில் விர்ஜீனிய வுல்ஃப் தனக்குத்தானே பேசிக் கொள்வதின் மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்து முறையைக் கையாண்டார்.

ஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இவர் வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர் காலத்திய பெண்ணிய விமர்சனத்தினால் பெரிதும் போற்றப்பட்ட இவரது நாவல்கள் பொதுமக்களின் குரலுக்கும் தனிப்பட்ட அந்தரங்கமான குரலுக்கும் இடையிலான ஒரு சமரசத்தை உண்டாக்கும் விதமாக அமைந்தவை.

கண்ணால் பார்க்கப்படுபவை எந்தவிதமான எண்ணங்களை மனதில் உண்டாக்குகின்றன என்பதைக் கவனித்து எழுதவேண்டும் எனும் எண்ணத்தை இவர் முன்வைத்தார்.

தமிழில் நாவல் எழுதுவர்கள் பெரும்பாலும் தங்களது சுயசரிதைத்தனமான அனுவங்களை எழுதுபவர்களாக இருக்கும்போது விர்ஜீனியா உல்ஃப் மற்றவர்களைப் பற்றி எழுதுங்கள் என்றார்.

எழுத்து குறித்து இவரது ஆலோசனைகள்.

1 உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்.

2 அந்நியர்களை கூர்ந்து கவனியுங்கள். அவர்களது பேச்சைக் காட்டிலும் அவர்களது மௌனங்களை அதிகம் கவனியுங்கள்.

3 பலகீனமானவர்களுக்குள் இருக்கும் பலமான உலகத்தைக் கண்டுபிடியுங்கள்.

Comments (0)
Add Comment