சோமனதுடி (1975):
கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த் அவர்களின் நாவலை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.
தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஓர் எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அவலங்கள் எந்த சமரசமுமின்றி காட்சிகளாக விரிகின்றன என்று சோமனதுடி என்ற திரைப்படம் பற்றிய குறிப்பை முகநூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சசிகலா பாபு.
“உழுது வாழ ஒரு துண்டு நிலம் கேட்கும் சோமனின் ஆசை அவனது இறப்பு வரை நிறைவேறாமலேயே போகிறது.
மலைப்பிரதேசக் காடுகளில் ஆங்கிலேயத் துரைகளின் கீழ் அடிமைகளைப்போல் கடும் வேலை செய்ய செல்லும் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். பெண்கள் அங்கிருக்கும் பல ஆண்களுக்கு இரையாகின்றனர்.
மதமாற்றம் எப்படி இவர்கள் வாழ்க்கைக்குள் வருகிறது, என்னவிதமான மாற்றங்களை அது தருகிறது என்றும் காட்சிகள் உண்டு. குடி இவர்களின் வாழ்வை சீரழிக்கிறது.
பஞ்சூர்லி தெய்வத்தை வணங்கி வாழ்ந்து வந்த ஓர் எளிய மனிதன் தனது கொடும் ஏழ்மைக்கும் பக்திக்கும் சாதிய விலக்குகளுக்கும் இடையே அல்லாடி அல்லல்பட்டு, வாழ வழியறியாமல் தன் உடுக்கையை அடித்து அடித்து தன் ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக்கொண்டு இறந்தே போகிறான்” என்று எழுதியுள்ளார்.
நன்றி: முகநூல் பதிவு
#எழுத்தாளர்_சிவராம_கரந்த் #சோமனதுடி_படம் #எழுத்தாளர்_சசிகலாபாபு #chomanna_dudi #writer_sivarama_karnth #writer_sasikalababu #chomana_dhudi_movie