உண்மையைத் தேடி அலைய வேண்டியதில்லை!

படித்ததில் ரசித்தது:

உண்மையைத் தேடித் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பது வெகு தூரத்திற்கு அப்பாலுக்கு அப்பால் இல்லை. வினாடிக்கு வினாடி செயல்படும் மனதைப் பற்றிய உண்மை அதுவே.

வினாடிக்கு வினாடி உள்ள உண்மையை, காலத்தின் முழுச் செய்கையை, விளைவை அறிந்தால் அந்த அறிவிலிருந்து உணர்வும் சக்தியும் புத்தியும் அன்பும் தோன்றும்.

மனது தன்னுடைய உணர்வைச் சுயநலச் செயலுக்கு உபயோகித்தால் எல்லாத் துன்பங்களுடனும், துயரங்களுடனும், குழப்பங்களுடனும், ஏமாற்றங்களுடனும் காலம் என்பது தோன்றுகிறது.

முழுச் செய்கையையும் உணர்ந்து எப்போது மனம் மறைந்து போகிறதோ அப்போது அன்பு தோன்றும். 

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

Comments (0)
Add Comment