மறதியற்ற மனதின் சுமைகள்!

வாசிப்பின் ருசி:

‘கடைசியாக ஒரு முறை’ நூலின் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.

நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம்.

நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது.

மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது?

சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது?

தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.

– அரவிந்தனின் ‘கடைசியாக ஒரு முறை’ என்ற நூலிற்காக எழுத்தாளர் இமையம் எழுதிய முன்னுரை.

Comments (0)
Add Comment