புரிதலின் பாதையில் கடக்க வேண்டிய தூரம் நிறைய…!

வாசிப்பின் ருசி:

பெண்ணிடம், “எப்போதாவது உன்னை நான் தப்பா ஒரு பார்வை பார்த்திருப்பேனா?” என்று ஆதங்கம் பொங்கக் கேட்பதே ஒருவகையில் நான் இயல்புக்கு மாறாக உன்னிடம் நடந்துகொண்டு வந்திருக்கிறேன் என்னும் சுயதம்பட்டத்தின் வெளிப்பாடு தான்.

இயல்பென்பது அவளை சக உயிராக பார்க்கும் பார்வை மட்டும்தான். அதில் சிறப்பித்துக் கூறவோ, பெருமை கொள்ளவோ எதுவுமே இல்லை.

ஆனால், அதுவே இங்கு கர்வமாக இருக்கிறது என்றால் இன்னும் அவளை இயல்பாக அணுகத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்!

புரிதலின் பாதையில் கடக்க வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது.

– யாத்திரி எழுதிய  ‘பெருந்தக்க யாவுள’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment