இந்தியக் குடிமக்கள் அறிவியல் மனப்பான்மையை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்கவேண்டும் என்றும் அது அவர்களது கடமை என்றும் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
அறிவியல் மனப்பான்மை என்பதன் அர்த்தம் என்ன?
இங்கே நான்கு அம்சங்களை கவனிக்கவேண்டும்:
அறிவியல் மனப்பான்மையை ஒரு பதத்தில் விளக்கவேண்டுமானால், காரணத்துக்கும் காரியத்துக்குமான உறவு (Cause effect relation) என்று சொல்லலாம். ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். கடவுள், விதி, அதிர்ஷ்டம், ஊழ் போன்ற எதுவும் அதற்குப் பின்னால் இருக்காது.
உண்மைக் காரணங்களை என்னுடைய அறிவால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? நமது நாட்டில் அடிக்கடி சொல்லப்படுகிறது.
“நீ பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன், உனக்கு இவ்வளவுதான் புரியும். நீ ஒரு தலித், உனக்கு எதுவும் புரியாது. நீ ஒரு பெண், உனக்குக் கல்விபெற உரிமை கிடையாது” என்று சொல்கிறார்கள்.
இந்த உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னாலும் என்ன காரணம் இருக்கிறதா என்று நம்மால் புரிந்துகொள்ளமுடியாது.
உதாரணமாக, புற்றுநோய் ஏன் நம்மை பாதிக்கிறது என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை எப்போதும் பணிவுடன் இருக்கும்.
உண்மைக்கான அதன் தேடல் முடிவற்றதாக இருக்கும், அந்தத் தேடல் நீண்டுகொண்டே போகும். மதத்தைப் போல “இதுதான் இறுதி முடிவு” என்ற அடிப்படையில் அறிவியல் மனப்பான்மை இயங்குவதில்லை.
அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதுதான் அதிக நம்பகத்தன்மை கொண்ட வழியும்கூட.
அதனால்தான் அறிவியல் மனப்பான்மையை ஏற்றுக்கொள்வது என்பது மனிதவாழ்வின் முக்கியமான அம்சமாக மாறியிருக்கிறது. நாடு முன்னேறுவதற்கான முக்கியத் தேவை இது.
– 2013ம் ஆண்டில் மருத்துவரும் செயற்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி
தமிழாக்கம்: நாராயணி சுப்ரமணியன்