உலகை அறிந்துகொள்ள உதவும் புத்தகங்கள்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

புத்தகங்கள் குறித்தும் வாசிப்புப் பழக்கம் குறித்தும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.

கேள்வி:

வாசிப்புப் பழக்கம் ஏன் அவசியம்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதில்:

வாழ்க்கை நம் ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட ஒரு சூழலில், குறிப்பிட்ட கால, இனம், குடும்பத்துக்குள் வாழ மட்டுமே அனுமதிக்கிறது.

ஆனால், புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும் பல்வேறு மனிதர்களை நிலவெளியை, அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

அந்த வகையில் புத்தகங்கள் உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகை தெரிந்து கொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.

– நன்றி : ஆனந்த விகடன்

reading bookswriter s ramakrishnanஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்எஸ்.ரா.எஸ்.ராமகிருஷ்ணன்
Comments (0)
Add Comment