“என்னைப்போல் எழுத்து சோறு போடும் என்று நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே” என்று கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தொமுசி. ரகுநாதனிடம் சொன்னதை LLA வில் இலக்கியக் கூட்டம் முடித்து அண்ணா சாலையில் நடந்தபடி இரவு பேருந்து பிடிக்கச் சென்றபோது பி.யு.சி மாணவனாகிய என்னிடம் ரகுநாதன் சொன்னார்.
இதனால்தான் நான் வங்கி வேலைக்குச் சென்றேன். ஆனாலும் “முழு நேரத்தையும் எழுத்துக்காக அர்ப்பணித்துக் கொள்” என்று எனக்குள் ஒரு குரல் சதா சொல்லிக் கொண்டே இருந்தது.
இதனால் 24 ஆண்டுகளுக்கு முன் நான் எனது வங்கி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளன் ஆனேன்.
நான் ஏன் எழுதுகிறேன் என்று யாராவது கேட்டால் “வாழ்க்கை, என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்குகிறது. அதனால்தான் எழுதுகிறேன்” என்பதுதான் எனது ஒரே பதில்.
– நன்றி: எழுத்தாளர் இந்திரன் முகநூல் பதிவு.