மே தினக் கவிதை:
ஒரு தீபாவளி போல்
புத்தாண்டு போல்
ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்?
நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி
சிறப்பு திரைப்படம்
பட்டிமன்றம்
குத்துப் பாட்டு கும்மாளம்
என
டிவி முன்
கடந்து போகும்
வழக்கமான பண்டிகை
போன்றதா மே தினம்?
டாஸ்மாக் பார்களில்
நண்பர்களோடு
மயங்கிக் களிக்கவா
இந்த மே தினம்?
திங்கட் கிழமையில் வந்ததால்
சனி ஞாயிறையும் சேர்த்து
மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில்
அடங்கிப் போகும்
எளிய
கேளிக்கை தகுதியுடையதா அது?
சினிமா தியேட்டரிலும்
ஷாப்பிங் மால்களிலும் கூடி
மாலையில் KFC யில்
கோழிக் கால் கடிக்கும்
குதூகலத்திற்கு
கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை?
ஒரு புத்தாண்டைப் போல்
பரஸ்பரம்
Happy may day சொல்லி
கடக்கவா இந்நாள்?
உழைக்கும் மக்கள்
சிந்திய உதிரத்தில்
உதித்த தினமல்லவா இந்த மே தினம்!
அதில் தோய்ந்து
உலகெங்கும் பறக்கும்
செங்கொடியில் அதன்
ரத்தக் கவிச்சி
இன்னுமல்லவா இருக்கிறது.
அது நமது
சென்ற நூற்றாண்டு
பாட்டன்கள், பாட்டிகள்
உயிர் மாய்ந்து
சிக்காகோ நகர வீதிகளில்
சிந்திய உதிரமல்லவா
8 மணி நேர வேலை
8 மணி நேர ஓய்வு
8 மணி நேர உறக்கம் என
நமக்கும் சேர்த்து
போராடி பெற்ற உரிமையது
ஆனால், எட்டாக் கனியாகவல்லவா
இன்றும் அது இருக்கிறது
உழைப்போர் உரிமை காக்க
இயற்கை வளம் காக்க
விவசாயி நலன் காக்க
உலகமய ஏகாதிபத்தியம் எதிர்க்க
காவிக் கூட்டத்தின்
பாசிஸ வெறி எதிர்க்க
சபதமெடுப்போம்
டெல்லியின் வீதிகளை
சிக்காகோவாக்க
சிவப்பாய் சிந்திப்போம்
உவப்பாய் உயர்த்துவோம் தோள்களை
சபதம் ஏற்போம் இந்நாளில்
காவிக்கு பரிசாய்
சாவைத் தருவோம்
அதற்கு
மார்க்சும் ஏங்கெல்ஸ்சும்
லெனினும் ஸ்டாலினும்
நமக்கு துணை நிற்பார்கள்
“இழப்பதற்கு ஒன்றுமில்லை
அடிமை சங்கிலியைத் தவிர
அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு”
புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்.
நன்றி: துருவன் பாலா முகநூல் பதிவு