மறைந்த அன்பு நண்பர் மகபூப் பாட்சா அவர்கள், தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக சமூகதளங்களில் அவர் ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு சோகோ (SOCO) அறகட்டளை சார்பில் திட்டமிட்டபடி நேற்று 13-04-2024 அன்று நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர்கள் திரு.லஜபதிராய், திரு.அஜ்மல்கான் மற்றும் சோகோ அறகட்டளை நிர்வாகிகள் சகோதரர் பிரான்ஸிஸ், சகோதரி செல்வ கோமதி மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் மகபூப் பாசில் அவரது மூத்த சகோதரர் மகபூப் ஆதிப் மற்றும் விழா குழுவினர் சிறப்புற விழா ஏறபாடுகளைச் செய்திருந்தனர்.
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி தோழர் ஹரிபரந்தாமன் அவரகள் பாட்சா அவர்கள் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தலித் உரிமை செயல்பாட்டாளர் திருவாளார் Rev வின்செண்ட் மனோகரன், பாட்சா அவர்களின் நினைவுக் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டார்.
நூலின் தொகுப்பாசிரியர் வழக்குரைஞர் திரு லஜபதிராய் அவர்கள் சிறப்பாக நூலை வடிவமைத்திருந்தார்.
நூலின் முதல் பிரதியை மக்கள் கண்ணாணிப்பக இயக்குனர் மனித உரிமை செயல்பாட்டாளார் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் பெற்றுக் கொண்டார்.
விழாவின் துவக்கத்தில் ‘பாட்சா என்றொரு மனிதன்’ என்ற ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் திரையிடபட்டது.
பாட்சாவின் மனைவி திருமதி ஆரிப் அவர்கள் பாட்சாவின் பண்புகள் குறித்து உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
காலை 10 : 30 மணிக்குத் துவங்கி நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் மூன்று மணி வரை நீடித்தாலும் கூட உணர்வுகளில் இணைக்கபட்ட அனைத்து அறிஞர்களும் கற்றோரும் ஆன்றோரும் முழுமையாக அரங்கில் அமைதியோடு அமர்ந்திருந்து உணவருந்திச் சென்றனர்.
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த நபர்கள் பாட்சாவின் நெடுங்கால நண்பர்கள். அவரது வாழ்க்கையில் அவருடன் உடன் நின்றவர்கள். அனைவரும் தங்களது உணர்வு பூர்வமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மற்றும் மிக முக்கிய ஆளுமைகளான காந்தி கிராம பேராசிரியர் முனைவர் பழனிதுரை, தோழர் TSS மணி மற்றும் பாட்சாவின் உற்ற நண்பர் மறைந்த அமைதி அறகட்டளை மேனாள் தலைவர் முனைவர் பால் பாஸ்கர் அவரகளின் புதல்வரும் அமைதி அறக்கட்டளை தலைவருமான ரூபன் ஆகியோர் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்தனர்.
சகோதரி செல்வ கோமதி அவரகள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சோகோ (SOCO) வுடன் தொடர்ந்து பணியாற்றி தனது முழு பங்களிப்பை வழங்குவதாக கூறினார்.
SOCO அறகட்டளையின் மேலாண்மை அறங்காவலர் மகபூப் பாசில் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
SOCO அறகட்டளை அறங்காவலர்கள், வழக்கறிஞர் லஜபதிராய், பிரான்ஸிஸ் ஆகியோர்கள் SOCO வை தொடர்ந்து வழி நடத்துவதற்கு பங்களிப்பதாக கூறினார்கள்.
இறுதியாக பாட்சாவின் மூத்த புதல்வர் வழக்கறிஞர் மகபூப் ஆதிப் ஏற்புரை வழங்கினார்.
பாட்சா உருவாக்கிய SOCO அறகட்டளையின் விழுமியங்கள் தாங்கிய சுடரொளியை ஏந்தி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றிட உள்ள அன்பு தம்பி SOCO வின் மேலாண்மை நிர்வாகி மற்றும் இயக்குனர் மகபூப் பாசில் மற்றும் அணியினருக்கு நல்வாழ்த்துகள்.