அ.தி.மு.க. எதிர்காலம்: யார் தீர்மானிப்பார்கள்?

அ.தி.மு.க துவங்கப்பட்ட போதிருந்தே அதை உருவாக்கிய மக்கள் திலகம் நம்பியது அதன் வேரைப் போன்ற தொண்டர்களைத் தான். அவர்கள் தான் அ.தி.மு.க.வை ஆட்சியிலும் அமர்த்தினார்கள். எதிர்க்கட்சி வரிசையிலும் அமர வைத்தார்கள். தேசிய அளவிலும் முன்னேற்றிக் கவனிக்க வைத்தார்கள்.

தற்போது தமிழர் சூழலைப் பற்றிப் பேசித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். ராமநாநபுரத்தில் சுயேச்சையாகக் களம் காண்கிறார்.

டி.டி.வி.யின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி வைத்த நிலையில் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை – ஜூன் மாதம் அ.தி.மு.க தினகரன் வசம் வந்துவிடும் என்று ஆருடம் சொல்லியிருக்கிறார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு கடும் விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், யார் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் அதன் தொண்டர்களும், வாக்காளர்களும் தான். அண்ணாமலை போன்றவர்கள் அதைக் கணித்துவிட முடியாது.

தேர்வு எழுதுவதற்கு முன்பே மதிப்பெண்ணை யாரும் முடிவு செய்துவிட முடியாது.

admkannamalaibjpedapadi palanisamyepsmakkal thilagamopsttvஅ.தி.மு.கஅண்ணாமலைஎடப்பாடி பழனிசாமிஓ.பி.எஸ்டி.டி.வி.டி.டி.வி.தினகரன்பா.ஜ.கமக்கள் திலகம்
Comments (0)
Add Comment