தேர்தலில் தற்போதைய நடைமுறையின்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்பாக மட்டுமே விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து எண்ணப்படுகிறது.
ஆனால் விவிபேட் பொறுத்தப்பட்ட அனைத்து மின்னணு எந்திரங்களையும் சரிபார்க்க கோரிக்கை விடுத்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான அருண் குமார் அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவை மின்னணு எந்திரம் மற்றும் விவிபேட் வழக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் இணைக்கும்படி உத்தரவிட்டனர்.