தேனிசைத் தென்றல் தேவாவின் குரல் தமிழ் மண்ணின் குரல். 400க்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாள பாடல்களுக்கு இசையமைத்த தேவா ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாது. அவரே ஒரு ஓவியர்தான்.
நான் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘தேடலின் குரல்கள்’ எனும் ‘தமிழ் ஓவிய / சிற்பக் கலைகளின் வரலாறு’ எனும் வண்ணப் படங்களோடு கூடிய புத்தகத்தை அணு அணுவாக ரசித்தவர்.
தன்னுடைய ஓவிய ஈடுபாட்டை ஒளிவுமறைவின்றி அவர் என்னிடம் எடுத்துச் சொன்னபோதுதான் உணர்ந்தேன் அவரது வெற்றிச் சரித்திரத்தை.
‘கானா’ எனும் சென்னை நகர மக்களிசைக்கு புதிய உயிர் கொடுத்த தேவா (மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன் – நவம்பர் 20,1950) மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் பக்கத்துல இருக்கிற குடிசைப்பகுதியில் ஒரு தபால்காரரின் மகனாக வளர்ந்தவர் என்பதை அவரே சொல்கிறார்.
தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவாக கொடிகட்டிப் பறக்கும் இவரது ரகசியம் இதுதான். எளிமை, இனிமை, உழைப்பு.
தன்ராஜ் மாஸ்டரிடம் மேலை இசைக்கருவிகளை இசைக்கக் கற்றுக்கொண்ட தேவா, சென்னை நகரத்து கானா பாடல் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் ஒரு நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
– நன்றி: முகநூல் பதிவு