இந்திய மாடல் அழகியான பூனம் பாண்டே கடந்த சில தினங்களுக்கு முன் தான் இறந்ததாக பதிவு ஒன்றை அவரது மேலாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவுப்படி கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக அவர் இறந்தாகவும் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் பதிவிட்டுருந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென பூனம் பாண்டே, “சமூகத்தில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான இறந்ததாக தெரிவித்தேன்” என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து பலரும் பூனம் பாண்டே மீது மனவருத்தம் கொண்டுள்ளனர். மேலும் பூனம் பாண்டேவின் இந்த செயலை கண்டித்து நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினரான சத்யஜுத் தாம்பே காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பூனம் பாண்டேவின் இந்த செயலுக்கு தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பூனம்பாண்டே கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றால், விளையாட்டுத் திடலில் தான் நிர்வாணமாக வலம் வருவதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.
#பூனம்_பாண்டே #Punam_Panday #கர்ப்பப்பை_புற்றுநோய் #Cervical_cancer #Jail #வழக்கறிஞர்கள் #Lawyers #விழிப்புணர்வு #Awarness