நூல் விமர்சனம்:
தமிழக ஆளுமைகள் வரிசை நூலில் முதல் நூலாக வெளிவருகிறது ‘தோழமை எனும் தூயசொல் நூல்.
இடதுசாரி இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இரா.நல்லக்கண்ணுவின் அரசியல் மற்றும் வாழ்வியல் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
விலைமதிப்பில்லா அவருடைய தியாகவாழ்வைப் போற்றும்விதமாக இந்நூலுக்கு விலை வைக்கப்படவில்லை. எப்பொழுதும் அன்புப் பிரதியாகவே அளிக்கப்படவிருக்கிறது.
இந்நூலை எழுதியுள்ள கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.
இதுவரை எட்டுக் கவிதைத் தொகுப்புகளும் எட்டுக் கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.
திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.
நூல்: தோழமை எனும் தூயசொல்
ஆசிரியர்: யுகபாரதி
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 38