எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்வோம்!

நூல் விமர்சனம்:

நிறமற்ற வானவில் நூல் எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது.

இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப் பஞ்சமில்லை. கணவனை இழந்த மனைவி, தாய் தந்தையை இழந்த குழந்தைகள்; அனாதையாக விடப்பட்ட முதியோர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லி எப்படித் தேற்ற முடியும்.

எல்லாவற்றையும்விட விபரீதமானது தற்கொலை எண்ணம்!

உளவியல் ஆய்வாளர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை சுஜாதா அழகாக முடித்துள்ளார்.

மனிதர்களே! மனிதர்களே!!

நீங்கள் ஆணோ, பெண்ணோ அழகிய வாழ்வை அழிக்க வேண்டாம்.
‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பதுபோல் எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்வது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்கவும் தான். அதில் உள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது! அதில் இன்பம் கண்டு மீண்டும் வாழ முற்படுகிறார் சுஜாதாவின் கதாநாயகர்.

உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா.

சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.

இது போன்ற நல்ல நூலை வாசிப்பது அலாதி இன்பம். நாமும் வாசிப்போம். பயன்பெறுவோம்.

{எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}

நூல்: நிறமற்ற வானவில்
ஆசிரியர்: சுஜாதா
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்:
 224
விலை: ரூ.120/-

Comments (0)
Add Comment