* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு ‘ஓர்’ வரும், எங்கு ‘ஒரு’ வரும்?
* ‘இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல’.
– இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி? எங்கு ‘ர’, எங்கு ‘ற’?
* இந்த ஒற்றெழுத்து பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது?
அன்றாடம் நாம் பேசும், வாசிக்கும் மொழி என்றாலும் எழுதும்போது தமிழில் பிழைகள் ஏற்படுவதை நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்க முடியவில்லை.
தமிழ் இலக்கணம் புரிந்துவிட்டால் இந்தப் பிரச்சனைகள் இருக்காது என்பது உண்மை. ஆனால், எப்படிப் படிப்பது, எங்கிருந்து தொடங்குவது? அப்படியே தொடங்கினாலும் புரியுமா? இந்தப் புத்தகத்தை படியுங்கள்.
சினிமா, டிவி, விளம்பரங்கள் என்று நீங்கள் அறிந்த, நீங்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு உருப்படியாகத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுக்கிறது இந்நூல்.
தமிழ்ப்பேப்பர் டாட் நெட் தளத்தில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கொத்தனார் நோட்ஸ் தொடரின் முழுமையான நூல் வடிவம்தான் இந்தநூல். இந்த நூலைப் படித்துப் பயன்பெறுவோம்.
நூல்: ஜாலியா தமிழ் இலக்கணம்.
ஆசிரியர்: இலவசக் கொத்தனார்
கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்:129
விலை: ரூ.75