நூல் அறிமுகம்:
சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர்
மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார்.
எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள், போராட்டங்கள் அவற்றை ஓவியமாகத் தீட்ட தன் கையில் இருக்கும் வண்ணங்கள் அனைத்தையும் செலவிட்டு இருக்கிறார்.
ஒரு புகைப்படத்தில் காணப்படும் எளிய மனிதரின் ஆழ்மனதைப் பேச வைப்பதின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியைக் கையாள்கிறார்.
மாணவப் பருவத்தில் முற்போக்கு அணியில் சென்னை நகரத் தெருக்களில் சலங்கை கட்டி ஆடியும் வீதி நாடகங்களில் நடித்தும் வந்த மனசாட்சி உள்ள ஒரு கலைஞன் எழுதிய இந்த நாவல் சென்னைத் தமிழுக்கு ஒரு சீதனம்.
நூலில், “சென்னையில் குடியேறிவர்கள் ஏரிகள், குளங்கள், நீர் வழித்தடங்களை அபகரித்ததால் சென்னையைப் புயல்கள் அதிர வைக்கிறது. பள்ளிக்கரணையில் பல ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலம் இருந்தது.
அடையாற்றில் உயிரினங்களை அனைத்து வங்கக்கடல் முகத்துவாரத்தில் இருந்த சதுப்பு நிலமும், மக்கள் தாகம் தீர்த்து, வேளானை செழிக்க வைத்த கூவம் நதியும் எல்லாம் எங்கே காணாமல் போனது .
கூவம், அடையாறு மனித தாகம் தீர்த்த தெளீர் நதிகளை களவாடி வீடுகளும், தொழில் நிறுவனங்களும், சுயநிதி கல்லூரிகளுக்கு அபகரித்ததால் சென்னையை வர்தா, மிக்ஜாம் எது வந்தாலும் சென்னை நீரில் மூழ்குவதை எக்காலத்திலும் தடுக்க முடியாது .
சென்னை பூர்வகுடிகள் இரு நதியின் கரையோரம் வாழ்ந்தவர்களைத் துரத்தி அடித்து அந்த இடங்களை ஆதாயத்திற்கு களவாடியதால் புயலின் கொடூர விபரிதங்கள் நடக்கிறது.
இவற்றையெல்லாம் என் ‘அடையாற்றுக்கரை’ புதினத்தில் 1977-ல் வீசிய புயலை ஆதாரத்தோடு எழுதி அடையாற்றுக்கரை மக்களின் கடந்த 100 ஆண்டு வாழ்வை பதிவு செய்திருக்கிறேன்.
இந்தப் புயலின் பாதிப்புகள் ஏன் நடந்தது என்பதை அறிய விரும்புபவர்கள் என் ‘அடையாற்றுக்கரை’ நாவலில் தேடிக்கொள்ளலாம்” என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: அடையாற்றுக்கரை
ஆசிரியர் : மு.து.பிரபாகரன்
பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.400