சென்னையை எப்படிச் சுத்தப்படுத்தப் போகிறார்கள்?

புயலும், கன மழையும் ஒருவழியாகக் கடந்துபோய் விட்டன.
சென்னை மாநகரம் உருக்குலைந்த மாதிரிக் கிடக்கிறது. மரங்கள் விழுந்தும், சாக்கடை நாற்றமும், எலிகள் செத்த வாடையும் நகர் வெளியில் பரவிக் கிடக்கின்றன. எங்கும் சேறு பாய் விரித்திருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறுகிறார்கள்.

தூய்மைப் பணியாளர்கள் பெருஞ்சுமையுடன் புயல் உருவாக்கிவிட்டுப் போன கழிவுகளை அகற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் எந்த அளவுக்கு உழைக்க முடியும்? நாற்றங்களைக் களைய முடியும்?

முதலில் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டே மீட்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபடமுடியும். முதலில் அவர்களைத் தகுந்த பாதுகாப்பு அளித்த பிறகே பணிகளைச் செய்ய வைக்க வேண்டும்.

சென்னையில் எந்த அளவுக்கு மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தற்போது பல தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் எலிகளும், நாய்களும் இறந்து நீரில் மிதந்திருக்கிற நிலையில் எலிக்காய்ச்சல் போன்ற ஆபத்தான தொற்றுகள் பரவுவதைத் தடுத்தாக வேண்டும்.

அதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருந்தாக வேண்டும்.

லட்சக் கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்திருக்கிற நிலையில் சென்னைப் பெரு நகரை எப்படிச் சுத்தப் படுத்தப் போகிறார்கள்?

எப்போது சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பும்?

இப்படிப் பலருக்கும் பெருமூச்சுடன் எத்தனையோ கேள்விகள்!

Comments (0)
Add Comment