கொல்லப்படாத மனிதர்களைத் தெரிந்துகொள்வோம்!

கர்ணன், பரியேரும் பெருமாள், மாமனிதன் என தன் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் பல்வேறுபட்ட மனிதர்களைக் காட்டிய திரைக் கலைஞன் மாரி செல்வராஜ்.

அவர் எழுதிய நூல் ‘தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்’. தன் இளம்பருவம் முதல் தான் சந்தித்த, உடன் வாழ்ந்த மனிதர்களை பற்றிய நிகழ்வுகளை கதைகளாக இதில் தந்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள மாஞ்சோலை என்னும் கிராமத்தில் போராடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையின் ஆவேச அடக்குமுறைக்கு ஆட்பட்டு கொல்லபட்டது, தடியடிபட்டு தாமிரபரணியில் மூழ்கியது என அவர்களின் துயரங்களைச் சொல்லும் கதை தான் நூலின் தலைப்பு.

மாரி செல்வராஜ் சந்தித்த மனிதர்கள் எத்தனை வகை:

‘அடுக்குச் செம்பருத்தி பெருமாள் கோவில் மலையில் ஸ்டாலின் பத்மாவை தன்னை காதலிப்பதாக இருந்தால் அடுக்கு செம்பருத்தி வைத்து வர சொல்லி, அதை பார்க்காமலே இறந்து விடுவான்.

செண்பகவள்ளி என்று நினைத்த பேச்சியம்மா.

பால்ய சிநேகிதியாய் இருந்து நண்பன் மூர்த்தியின் மனைவி ஆனா பவானி.

அம்பேத்கருக்கு பிடிக்காத காந்தியை சாக்கு மூட்டையில் கட்டி கடத்திய சிறுவயது அரசியல்.

பிடிக்காத மாட்டை காப்பாற்றி, அது பிடித்து போனபின் சாக விட்ட தருணம்.

பகுத்தறிவு பேசும் அப்பாதுரை மாமாவின் இன்னொரு முகம் அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சி.

– என இன்னும் பல மனிதர்களை அவர்களின் உணர்வுகள், உரிமைகள், இழப்புகள் மற்றும் வன்மங்களை அனுபவ பதிவாக பதிந்து இருப்பது சிறப்பு.

 தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளில் சிலவற்றை அனுபவமாக உணர்ந்து அவற்றை இந்த நூலில் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் மாரி செல்வராஜ். 

நூல்: தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
ஆசிரியர்: மாரி செல்வராஜ்
பதிப்பகம்: வம்சி புக்ஸ்
பக்கங்கள்: 200
விலை: ₹145

Comments (0)
Add Comment