பரண் :
கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’
பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா?
என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன்.
நான் எவ்வளவு காலம் சினிமா உலகில் பணியாற்றினேன் என்பது உங்களுக்கே கூடத் தெரியும்.
1950ல் ஆரம்பித்து சுமார் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். பத்து படங்களே நானே தயாரித்திருக்கிறேன். அவற்றில் சரியாக ஓடாத படங்கள் பெரும் நஷ்டத்தைத் தந்துவிட வில்லை.
ஆனால் வெற்றிப் படங்களோ நிறைய லாபத்தைத் தந்தன.எம்.ஜி.ஆரை வைத்தே மூன்று படங்கள் எடுத்திருக்கிறேன்.
என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் சிலர் சினிமாவில் எழுத்தாளர்களாகவும், டைரக்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். படம் தயாரித்திருக்கிறார்கள். மாறனின் மகன் கலாநிதி மாறன் சன் டிவி நடத்துகிறார்.
ஆக ஒவ்வொருவருக்கும் வருமானத்திற்கான வழிமுனை-சோர்ஸ்- ஒழுங்காக இருக்கிறது. எல்லாமே வருமானவரி இலாகாவினால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்ட வருமானம்.
அப்படி இருக்க வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாக என் மீதோ, எங்கள் குடும்பத்தின் மீதோ வழக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை’’
– 22.4. 1998 தேதியிட்ட ‘துக்ளக்’’ இதழில் வெளியான பேட்டி.
பேட்டி கண்டவர் : துக்ளக் ஆசிரியர் சோ.
பதில் : கலைஞர் -தமிழக முதல்வராக இருந்தபோது