வெற்றியைக் கொண்டாடிய ஜிகர்தண்டா படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர்10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், வசூல் ரீதியாகவும் படம் வெற்றியைப் பெற்றதால் படக்குழுவினர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment