உயர்வு தாழ்வின்றி ஒன்றாய் உறங்குமிடம்!

நினைவில் நிற்கும் வரிகள்:
*
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே…
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்..
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவுமிடமே…

(சமரசம்…)

ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவுமிடமே…

(சமரசம்…)

சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இதுதான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவுமிடமே…

– 1956-ம் ஆண்டு கே.ஏ.தங்கவேலு நடிப்பில் வெளிவந்த ‘ரம்பையின் காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் ஏ.மருதகாசி.

Comments (0)
Add Comment