காலத்தால் அழியாத படைப்புகளாக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க சில நூல்களும் அவை உருவாக எடுத்துக்கொண்ட காலமும் பற்றிய தொகுப்பு.
- டால்ஸ்டாய்க்கு ‘போரும் அமைதியும்’ என்னும் நவீனத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆனது.
- கிப்பனுக்கு ‘ரோமப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற வரலாற்று நூலை எழுத இருபது ஆண்டுகள் பிடித்தன.
- பிஷப் பட்லர் ‘அனாலஜி’ என்னும் அரிய கருத்துக் கருவூலத்தை எழுதி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டன.
- தமிழ்க் கடல் மறைமலை அடிகள் ‘மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலினை எழுதி முடிக்க இருபத்து நான்கு ஆண்டுகள் ஆயிற்று.
- பாரசீகக் கவிஞர் பிர்தௌசி ஷா ‘நாமா’ என்னும் பெருங்காப்பியத்தை இயற்றி முடிக்க முப்பது ஆண்டுகள் பிடித்தன;
- ஜெர்மன் தேசத்து அறிஞன் சுதேவுக்கு ‘போஸ்ட்’ என்னும் நாடக நூலைப் படைக்க அறுபது ஆண்டுகள் ஆனதாம்.
நன்றி: முகநூல் பதிவு