அறிவுதான் மனதின் உணவு!

படித்ததில் பிடித்தது :

மனதில் நிறைய துளைகள் உள்ளன. அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.

கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எது கிடைத்தாலும் அதை வாங்கி வைத்துக் கொள்கிறது.

அறிவுதான் மனதின் உணவு. மனம் அறிவின் மூலம் வளர்கிறது.

கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. காதுகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

மனம் அறிவைத் தேடித் தேடி ஓடும் துளைகள்தான் இந்தப் பொறிகள்.

எந்தப் பயனும் இல்லாத அறிவைத் தேடி மனம் ஓடுகிறது.

மௌனம் சாத்தியமாக வேண்டுமானால் பொறிகளின் துளைகளை மூடி விடு

உன்னுடைய கண்களை காலியாக வைத்திரு. வெறுமையான கண்களோடு உலகத்தைப் பார்.

ஒரு ஞானி கண்களால் பார்க்கிறார் என்றாலும் அவர் எதையும் பார்ப்பதில்லை. அவர் மனம் எதையும் சேர்த்து வைப்பதில்லை.

மனம் தளர்வாக ஓய்வாக இருக்க ஆரம்பித்து விட்டால், இருத்தல் உனக்குள் மலர
ஆரம்பித்து விடுகிறது.

லாவோட்சூ

Comments (0)
Add Comment