நினைவில் நிற்கும் வாிகள் :
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
(வாழ நினைத்தால் வாழலாம்)
பாா்க்கத் தொிந்தால் பாதை தொியும்
பாா்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடா்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ நினைத்தால் வாழலாம்)
கண்ணில் தொியும் வண்ணப்பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ நினைத்தால் வாழலாம்)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
(வாழ நினைத்தால் வாழலாம்)
– 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் – தேவிகா நடிப்பில் வெளியான ‘பலே பாண்டியா‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
பாடலுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.