நம்பிக்கையளிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு!

சென்னை புத்தகக் காட்சிக்கு அறிமுகமாகும் நூல்

முரண் பதிப்பகத்தினூடாக ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் ‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல’ சிறுகதைத் தொகுப்பின் வழியாக பதிப்புத் துறைக்கு வந்தபோது (இப்ராஹிமுடன் இணைந்து) அறிமுகமானவர் மால்கம் என்று குறிப்பிடுகிறார் சிராஜுதீன்.

அ. மார்க்ஸுடைய பல நூல்களை வெளிட்டதோடு தோழர் அ. குமரேசன் மொழிபெயர்ப்பில் நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

தற்போது ஊடகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. தோழர் ச.தமிழ்ச்செல்வன் முன்னுரையுடன் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.

“தோழர் மால்கம் அவர்களின் எட்டுச் சிறுகதைகள் கொண்டு சிறிய கதைத் தொகுதி நம்பிக்கையளிக்கிறது. புதிய காற்றை சுவாசித்த உணர்வைத் தருகிறது.

மால்கம் நன்றாக கதை சொல்கிறார். புதிய தளங்களில் நின்று பேசுகிறார். வாழ்க்கை பற்றிய அவரது கண்ணோட்டம் முற்போக்கானதாக இருக்கிறது” என்று பாராட்டுகிறார் ச. தமிழ்ச்செல்வன்.

கல்லறையை உள்ளிருந்து திறக்கமுடியாது: மால்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
சென்னை – 18 / விலை ரூ. 100

Comments (0)
Add Comment