டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகை!

தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி.ராஜலட்சுமி (திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி – 11 நவம்பர் 1911 – 1964).

இவர் நாடகம், சினிமா, இலக்கியம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும், பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராகவும், குழந்தை திருமணங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து தன்னை சமூக சீர்திருத்தவாதி என்றும் அடையாளப்படுத்திக்கொண்டவர்.

நாடகங்கள் மூலமாக தேசபக்தி பாடல்களை பாடி சுதந்திர தாகத்தை தூண்டி வந்ததால் சிறைக்கும் சென்றுவந்தார் போராளி.டி. பி. ராஜலட்சுமி.

தமிழில் 1931-ம் ஆண்டில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

1943-ம் ஆண்டு வரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். பெண் சிசுக்கொலைக்கு குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சிசு கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்தெடுத்து, அக்குழந்தைக்கு ’மல்லிகா’ என பெயர் சூட்டி வளர்த்து, அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து புரட்சி செய்தார் ராஜலட்சுமி.

Comments (0)
Add Comment