செயல்படாமல் இருந்த 22 தமிழகக் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் தோ்தலில் போட்டியிடாதது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது போன்ற தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தோ்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில், தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில், 23 கட்சிகள் எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை தோ்தல் ஆணையம் கண்டறிந்தது.

இதையடுத்து 23 கட்சிகளையும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது.

உரிய விளக்கமளித்து கணக்குகள் காட்டும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் இந்தக் கட்சிகளின் பெயா்கள் இணைக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment