யாரெல்லாம் ஐ-ப்ரோ செய்யக் கூடாது, ஏன்?

ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்கும் போது அழகாக, பளிச்சென்று தெரிவதற்கு புருவங்களே முக்கியமானதாக இருக்கிறது.

என்னதான் கலரா, ஸ்டைலாக இருந்தாலும் புருவம் சரியாக அமையாவிட்டால் முகத்தின் அழகு என்பது காணாமல் போய்விடும்.

ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து பேஸியல் செய்தாலும் குறைந்த விலையில் செய்யப்படும் த்ரெட்டிங் தான் முகத்திற்கு அழகு சேர்க்கிறது. ஏனென்றால் அழகின் பெரும்பகுதியை புருவங்கள் ஆக்கிரமித்துள்ளன என்பதே உண்மை.

இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் ஐ புரோ செய்து கொள்ள விரும்புகின்றனர்.

ஆனால், அதைப் பற்றிய சரியான புரிதல் என்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்த வயதினர் பன்னக்கூடாது… யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

யாரெல்லாம் ஐ ப்ரோ பண்ணக்கூடாது?

15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், கர்ப்பிணிகள் குறைந்தது 7 மாதங்கள் வரை புருவ முடித் திருத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.

கருத்தரித்திருக்கும் போது இந்த நேரத்தில் உடல் உபாதைகள் இருக்கும் என்பதால் புருவ முடியை பிடுங்கி எடுக்கும்போது தலைவலி, தோல் அலர்ஜி, புருவ வீக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தவிர்ப்பது நல்லது.

கர்பமகா இருக்கும் சமயத்தில் தாய்க்கு சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டால் அது வயிற்றில் இருக்கும் கருவையும் பாதிக்கும்.

ஏழு மாதங்களுக்குள் ஐ ப்ரோ பண்ணும் போது ஒரே இடத்தில் புருவத்தை பிடித்தவாரு ஒரே நிலையில் அமர்ந்து இருப்பது அவர்களை சோர்வடைய செய்யும் என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே கர்ப்பிணிகள் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

ஐ புரோ ஏற்ற வயது என்ன?

இப்போது பள்ளி செல்லும் பெண் பிள்ளைகள் கூட ஐ ப்ரோ பண்ண ஆசைப்படுகின்றனர். ஆனால் இது அவர்கள் வயதுக்கு ஏற்றது இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

15 வயது பெண் குழந்தை ஆசைப்படுகிறாள் அல்லது அவளுக்கு புருவம் வடிவாக இல்லை என்பதற்காக அம்மாவே அவர்களை அழகு நிலையம் கூட்டிச் சென்று த்ரெட்டிங் பண்ண அனுமதிக்கின்றனர்.

ஒரு சில பார்லரில் அனுமதிப்பதில்லை ஆனால் சில அழகு நிலையங்களில் பணத்திற்காக இதை பொருட்படுத்துவதில்லை.

ஐ ப்ரோ பண்ணிக்கொள்ள 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண் குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்காதீர்கள்.

வளரும் பருவத்தில் இருக்கும் போது அவர்களது ஹார்மோன் மாற்றம், தோல் வளர்ச்சி, கண் நரம்பின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் என்பதால் ஐ ப்ரோ பண்ணும் போது கண், தோல் தடித்தல், போன்ற பல பிரச்சனைகளை உண்டுபன்னும்.

மேலும் அந்த வயதில் அவர்கள் எப்படி இருந்தாலும் இயற்கையாகவே அழகாக தெரிவார்கள் ஆகவே அதிக மேக்கப், ஐ ப்ரோ தவிர்க்கலாம்.

ஐ ப்ரோ த்ரெட்டிங் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது.

உங்களுக்கு புருவ முடிகள் அடர்ந்து வடிவம் இல்லாமல் இருந்தால் மட்டுமே அழகு நிலையங்களுக்கு சென்று த்ரெட்டிங் செய்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் புருவ முடிகளை அகற்றாதீர்கள்.

அது உங்கள் முக அழகை கெடுத்து விடக்கூடாது என்பதால் அதிகமாக இருக்கும் முடியை மட்டும் அகற்ற சொல்லுங்கள்.

மெல்லியதாக புருவத்தை திருத்த சொல்லாதீர்கள் அதுவும் உங்கள் அழகை கெடுக்கும்.

உங்கள் முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப ஐ ப்ரோ தேர்வு செய்யுங்கள் மற்றவரை பார்த்து அதேபோல் பண்ணிக்கொள்ள ஆசைப்படாதீர்கள்.

அது உங்கள் முகத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம்.

அதனால் உங்கள் முகத்தின் வடிவத்துக்கு ஏற்றது போல் புருவம் திருத்தம் செய்யும் போது கூடுதல் அழகை முகத்திற்கு கொடுக்கும் என்று அழகு கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment