தீபாவளிக்குச் செடியை நடுவோம்; வெடியை மறப்போம்!

தீபத் திருநாளில் தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள்.
***
பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் செறிவு அதிகரிக்கிறது என்பது உண்மை.

பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம் மற்றும் சோடியம் போன்ற இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசுகள் பல பகுதிகளில் குடியேறுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை.

இவற்றை மக்கள் சுவாசிக்கும் போது பலதரப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

மேலும் இந்த தூசி மற்றும் மாசுபடுத்திகள் நமது சுற்றுச்சூழலை அழித்து, நமது ஆரோக்கியத்தை எளிதில் ஆபத்தில் ஆழ்த்துகின்றது என்றும் அவர் கூறினார்.

ஆஸ்துமா உள்ள நோயாளிகள், உடல் நலமில்லாத பெரியவர்ளுக்கு இந்த சூழ்நிலை ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் என்றார் சுப்பாராவ்.

மேலும் பட்டாசுகளால் ஏற்படும் சத்தம் மற்றும் இறைச்சல் செவிமெடுக்கும் திறனை பாதிக்கிறது.

பட்டாசுகளின் இரைச்சல் அளவீடுகள் அவை அதிக ஒலி அழுத்த உச்ச அளவை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன.

இப்பொழுதுள்ள பட்டாசுகளின் சத்தம் காதுகளுக்கு வலியை ஏற்படுத்துகின்றது.

சில நாடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலி வரம்புகள் மற்றும் அளவீட்டு முறைகள் வழங்கப்படுள்ளதாகவு அவர் கூறினார்

ஆகவே ஆண்டுக்கு ஒரு முறைதானே என்ற நோக்கத்தில் சுற்றுச்சூழல் மற்றும் அதிக இறைச்சல் ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்தாமல் ஆளுக்கு ஒரு செடியை நட்டு நல்ல உணவை தயாரிக்க முயற்சி செய்யுங்கள் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என் வி சுப்பாராவ்,
கல்வி பிரிவு அதிகாரி,
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

Comments (0)
Add Comment