க்ரைம் த்ரில்லராக தயாராகும் ‘அஜினோமோட்டோ’!

நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் இது. ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, ஜோடியாக காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர், ‘அஜினோமோட்டோ’ என்பது சுவையை அதிகரிக்கக் கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி படத்தின் கதை தயாராகியிருக்கிறது.

கதையில் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு அந்த தருணத்தில் நல்லதாகத் தோன்றும். பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே திரைக்கதை” என்றார்.

அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

Comments (0)
Add Comment