நினைவில் நிற்கும் வரிகள்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
(உண்டாக்கி)
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான்…. முடித்தான்….
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன்
தன் நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்ததப்பா… ஹோய்…
(உண்டாக்கி)
கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்க்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியததை செய்வதற்க்கும் தேதி குறிப்பார்
நல்ல சேதி சொல்லும் ஜோசியருக்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ….
(உண்டாக்கி)
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வெளி எடுத்தான்
எடுத்தான்…. முடித்தான்….
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்…
(உண்டாக்கி)
-1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘முகராசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன், குரல்: டி.எம்.சௌந்தரராஜன், இசை: கே.வி.மகாதேவன்.