தங்களை அழகு படுத்தி கொள்வதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் வந்துவிட்டனர். அழகு நிலையங்கள் பெறும்பாலும் மகளிருக்கு மட்டுமே என்ற நிலை இப்போது இருபாலருக்கும் என்று மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
பொதுவாக ஆண்கள் தங்களின் அழகில் அக்கறை காட்ட மாட்டார்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை.
வித விதமான முடி திருத்தம்,பேசியல்,புருவ முடி திருத்தம் என்று தொடங்கி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தங்களை அழகு படுத்தி கொள்ள தயாராகிவிட்டனர் ஆண்களும்.
என்னதான் இருந்தாலும் பெண்களை அடித்துக் கொள்ள முடியுமா? ஆனால் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனை என்று பார்த்தால் தலை முடி வெள்ளையாவது. இப்போது இளம் வயதினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதற்காக தலைமுடியை கலர் செய்து கொல்லுதல்,விளம்பரங்களில் வரும் அத்தனை பொருட்களையும் பயன்படுத்தி பார்ப்பது, இதனால் உடல் நிலை பாதிப்புக்கு ஆளாவதாக கூறுகின்றனர்.
தலைமுடியில் போடப்படும் சாயம், [கலர்] இது பலவிதமான தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
தோல் அரிப்பு,முடி கொட்டுதல்,கண் பாதிப்பு,சுவாசக்கோளாறு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
வாழ்க்கை முறை மாற்றத்தின் நமது உடலில் பல விதமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது அதில் ஒரு பிரச்சனையாக சீக்கிரம் தலைமுடி நரைத்தல் ஆகும்.
அழகாக வயது குறைவாக இருந்தாலும் தலைமுடி நரைத்து விட்டால் ஒட்டுமொத்த அழகையும் சிதைத்துவிடும்.
சிலருக்கு மரபணு குறைபாடு,ஹார்மோன் பிரச்சனை காரணமாகவும் சிறு வயதில் வெள்ளை முடி வந்துவிடும். கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறைப்படி வெள்ளை முடியை கருமையாக மாற்றும் எண்ணெய் பற்றி பார்க்கலாம்.
நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தீங்கு இல்லாத எண்ணெய் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம் -2ஸ்பூன்
வெந்தயம் -1 ஸ்பூன்
மருதாணி இலை – 1கைப்பிடி
அவுரி இலை பொடி-2 ஸ்பூன்
நெல்லிக்காய் பொடி-3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 150 மில்லி கிராம்
கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி அளவு.
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை இரும்பு கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி மற்றும் அவுரி இலை பொடி இரண்டும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இதனையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை வாணலியில் போட்டு நன்றாக வறுத்து பொடி செய்யவும். மேலே குறிப்பிட்ட அனைத்து பொடிகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்த பொடிகளை போட்டு கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விடவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சூடானதும் டபுள் பாய்லிங் முறையில் 15 நிமிடம் சூடுபடுத்தவும்.
[குறிப்பு] டபுள் பாய்லிங் என்பது நேரடியாக எண்ணெயை சூடு செய்யாமல் தண்ணீரில் வைத்து சூடு செய்யும் முறையை டபுள் பாய்லிங் என்று குறிப்பிடுவது ஆகும்]
பிறகு 15 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரின் சூடு அடங்கியதும் எண்ணெயை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் விரைவில் வெள்ளை முடி கருமையாக மாறும்.
மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்வதோடு வளரும் முடி கருமையாகவும் வளரும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கெமிக்கல் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
பேஷன் என்ற பெயரில் தோலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் கலர் சாயங்களை விடவும் இது பாதுகாப்பானது.
-யாழினி சோமு