நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்

(கண்ணை நம்பாதே)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை

(கண்ணை நம்பாதே)

பொன் பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு

கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

(கண்ணை நம்பாதே)

1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நினைத்ததை முடிப்பவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி.

இசை: M.S.விஸ்வநாதன், பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்.

Comments (0)
Add Comment