படித்ததில் ரசித்தது:
இந்திய துணைக்கண்டத்தில் குழந்தைகளை விளையாட வைத்து அழகு பார்த்த முழுமுதற் பண்பாடு சிந்துவெளி பண்பாடு தான்.
ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைக்கும் விதவிதமான விளையாட்டு பொருள்கள் அதற்கு சான்றாகும்.
சிந்துவெளியின் நலிவிற்குப் பின் விளையாட்டின் முன்னுரிமைக்கான வட இந்தியச் சான்றுகள் அரிதாகி விட்டன வரலாற்றுக் காலம் வரையில்.
சிந்துவெளியின் விளையாட்டு முன்னுரிமையின் தொடர்ச்சிக்கு சான்றாக இருக்கும் ஒரே இலக்கியம் சங்க இலக்கியம் மட்டுமே.
கீழடி போன்ற அகழாய்வுகளும் அதைத்தான் சொல்கின்றன.
வரலாறு என்பது உறைபனி அல்ல. ஓடும் நதி.
– ஆர். பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ்