ஆனை மேலே இருந்தாலும் ஆட்டம் கூடாது!

பண்ணாதே! பண்ணாதே!
தப்புப் பண்ணாதே!
சொல்லாதே! சொல்லாதே!
பொய்யை சொல்லாதே!

மூணு குரங்கு சொல்லுதடா
நூறு தத்துவம் – அதை
நீயும் நானுடத கத்துக்கிட்டா
வெற்றி நிச்சயம்.

(பண்ணாதே…)

உழைச்சவங்க பொழப்புல – நீ
மண்ணப் போடக்கூடாது
இளைச்சவங்க முதுகுல நீ
குதிரை ஏறக்கூடாது

நல்ல மனம் வராது!
வந்த பின்னே கெடாது
தில்லு முல்லு ஆகாது!
தெய்வம் சும்மா விடாது

(பண்ணாதே…)

பெண்ணைப்பத்தி பெருமையாக
வெளியில் பேசுவாங்க
பேசிவிட்ட மறுகணமே
கொடுமை செய்யிறாங்க!

தன்னை பெத்த தாய்க்குகூட
துரோகம் நினைக்கிறாங்க
தொட்டு தாலிகட்டி வந்தவளை
வாட்டி வதைக்கிறாங்க!

(பண்ணாதே…)

அடுத்தவங்க கண்ணைப் பறிச்சி
கோலி ஆடக்கூடாது
ஆனை மேலே இருந்தாலும்
ஆட்டம் ஆடக்கூடாது

(பண்ணாதே…)

– 1980 ம் ஆண்டு எம்.ஜி.சி.சுகுமார் நடிப்பில் வெளிவந்த ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

இசை: சங்கர் கணேஷ்,

குரல்: ஆஷாராணி கோரஸ்.

Comments (0)
Add Comment