துணிந்தால் துன்பமில்லை!

துணிந்தால் துன்பமில்லை
சேர்ந்துவிட்டால் இன்பமில்லை
இனிமை கலந்துவரும் பாட்டிலே – மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே

கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே
துடிக்கும் இதயங்களே தாளம் – காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம்

ஆராரோ வென்று  – அன்னை
பாடக் கண்டு அமைதியிலே
குழந்தை தூங்குவதுமுண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு – மணம்
பொங்கும் மதுசிந்தும்
பகைமை நீங்கிவிடும் பாட்டாலே  – பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே.

-1960 ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் வெளிவந்த ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி, குரல்: P. சுசீலா, இயக்கம்: T.R.ராமண்ணா.

Comments (0)
Add Comment