நினைவில் நிற்கும் வரிகள்:
***
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும்
செவியில் செந்தமிழ்த் தேன் வழங்கவும்
அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து
அலைகடலெனுமொரு மணமகன் துணை பெறவே
(நடந்தாய்…)
உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
(நடந்தாய்…)
1972-ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் வெளிவந்த ‘அகத்தியர்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கே.டி.சந்தானம்.
இசை-குன்னக்குடி வைத்தியநாதன். குரல்-சீர்காழி கோவிந்தராஜன்