உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8-ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, உபி.யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் 2 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது. இங்கு பதிவான வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே 6 கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி, அசம்கர், ஜான்பூர், காஜிப்பூர், சந்தோலி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.
07.03.2022 10 : 50 A.M