அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள்!

– உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி போர் பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த ஐரோப்பிய வீரர்களை ரஷ்யாவுடன் மோத உக்ரைனுக்கு அழைத்துள்ளார்.

உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதில் தாமதம் காட்டி வருவதால் ஜெலன்ஸ்கி இந்த அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

“அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திராமல் முடிவு எடுக்க விரும்பும் பயிற்சி பெற்ற போராளிகள் உக்ரைன் நாட்டைக் காக்க ஐரோப்பாவிலிருந்து உக்ரைனுக்கு வருகை தர வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் போர் முற்றிவரும் நிலையில் உதவுவதற்கு தாமதம் காட்டுகின்றன. இதனால் என்ன பயன்.

ஐரோப்பிய யூனியன், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகள் ரஷ்யர்களுக்கு தங்கள் நாட்டுக்குள் வர விசா ரத்து செய்யப்படும். ரஷ்யாவுக்கு சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்படும். ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம் தடுக்கப்படும் என்றும் கூறி வருகின்றன.

ஆனால் இவ்வாறு மறைமுக எதிர்ப்பை காட்டுவதைவிட இந்த நாடுகள் தங்கள் படைகளை அனுப்பி உக்ரைன் படைகளுக்கு உதவுவதே தற்போதைய சூழலில் சிறந்ததாக இருக்கும். எனவே ஐரோப்பிய நாடுகளின் வீரர்கள் உக்ரைனுக்கு உதவ வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

26.02.2022  4 : 30 P.M

Comments (0)
Add Comment