நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்கு போடும் வாக்காளர்களுக்கு, தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக ‘பூத் சிலிப்’ வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், பூத் சிலிப் வழங்கும் பணியில், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பூத் சிலிப்பில், வாக்குக்கு பணம், கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது.
‘வாக்களிக்க பணம் கொடுப்பது அல்லது வாங்குவது அல்லது வேறு எந்த வகையிலும் பயன் பெறுவது, சட்டத்திற்கு புறம்பானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
சீட்டின் பின் பக்கத்தில், வாக்காளர்கள் வாக்கு போட பயன்படுத்த தகுதியான, 11 அடையாள அட்டை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளன.
17.02.2022 2 : 30 P.M