பஞ்சாப் மக்களை அவமதிக்க முயலுகிறது பா.ஜ.க!

– மன்மோகன் குற்றச்சாட்டு

பஞ்சாபில் வரும் 20-ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களை மக்கள் நினைவில் கொண்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு பிரச்சனைக்காக பஞ்சாப் முதல்வர் மற்றும் மாநில மக்களை பா.ஜ.க,வினர் அவமதிக்க முயன்றனர்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். பா.ஜ.க, தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை.

இப்பிரச்சனை தேசத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் அமர்ந்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

அரசியல்வாதிகளை கட்டியணைப்பதாலோ, அழைப்பின்றி பிரியாணி சாப்பிடப் போவதாலோ உறவுகள் மேம்படுவதில்லை.

பா.ஜ.க, அரசின் தேசியவாதம் என்பது பிரிட்டிஷாரின் பிரித்து ஆளும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பு பலவீனமடைந்து வருகின்றன” எனக் கூறினார்.

17.02.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment