70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்களிக்க ஏற்பாடு?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்த போது கொரோனா பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும், வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வந்து வாக்கை பதிவு செய்தனர். அதுபோல 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் சலுகை வழங்கப்பட்டது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்களுக்கு வாக்குப்பதிவு தினத்தன்று கடைசி ஒருமணி நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வயதானவர்களுக்கு எத்தகைய சலுகைகள் கொடுக்கலாம் என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சலுகையை வழங்கலாமா என்று மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

ஓரிரு நாட்களில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. அதன்பிறகு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை செயல்படுத்தப்படுமா என்பது தெரியவரும்.

07.02.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment