அ.முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் சுவாரசியம்!

நூல் வாசிப்பு:

அ.முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகின்றன.

அவரது கதை வெளியில் புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையாளச் சிக்கலும் இருக்கிறது. தமிழ் இருக்கிறது. சர்வதேசியம் இருக்கிறது. உயிரிச் சமநிலை குறித்த அக்கறை இருக்கிறது.

அவரது எழுத்துகள் வாசகனைக் கண்ணியப்படுத்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக அவரது கதைகளில் உண்மை இருக்கிறது. இந்த நம்பகத் தன்மை, இந்தத் தொகை நூலில் உள்ள கதைகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாசகர்களின் மனத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும்.

‘புவியீர்ப்புக் கட்டணம்’ – காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள்.

ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

தொகுப்பாசிரியர்: மு. இராமனாதன்

விலை: ரூ. 325

காலச்சுவடு இணையதள இணைப்பு
https://books.kalachuvadu.com/…/u0baau0bb5u0bafu0bb0u0…/

அச்சுநூலின் இணைய இணைப்பு

Comments (0)
Add Comment