– பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 133 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 22-ல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்காக போட்டியிடுபவர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யாலம் என மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5 மணிவரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம் எனவும், பிப்ரவரி 5-ல் பேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 7 கடைசி நாள்.
இதனிடையே வேட்புமன தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி நடந்துக் கொள்ள வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.