காந்தி தமிழில் எழுதிய கடிதம்!

மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.நடேசன் அவர்களுக்கு தமிழில் அனுப்பிய கடிதம். அருகிலிருந்த தமிழ் தெரிந்த ஒருவரை தமிழில் எழுத வைத்து, தமிழ்ப் பற்றால் அனுப்பிய கடிதம்.

அதனுடைய ஆங்கிலமும் தனியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட காந்தி, “காந்தி” என்று தமிழில் கையெழுத்திட்டதெல்லாம் உண்டு. வினோபாவுடைய கீதைப் பேருரைகள் விற்பனைக்கு வந்த பொழுது தமிழில் கையெழுத்து பிரதிகளைப் பார்த்திருக்கிறேன்.

வினோபா கையெழுத்தும், அதேபோல காந்தி கையெழுத்தும், பச்சை நிற அட்டையில் “கீதைப் பேருரைகள் – வினோபா” என்று இருக்கும்.

அதன் மேலே காந்தி கையொப்பமும் கீழே வினோபா கையொப்பமும் பார்த்ததுண்டு அந்தக் காலங்களில். மதுரை வரும்போது தமிழ் படிக்கவில்லையே என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உத்தமர் காந்தி.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

28.01.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment