– சிந்தனைக்கு சில வரிகள்.
சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்.
காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையில் நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும், ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
எனவே சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள்.
️உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள். பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைக் கொடுங்கள். உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்.
நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு, ஏற்படும் தோல்வி பற்றிகூடக் கவலைப்படாதே.
நூறு ரூபாயில் மனம் நிறைவடைந்துவிட்டால் அவன் பணக்காரன். கோடியிருந்தும் குறையிருந்தால் அவன் பரம ஏழை.
நிம்மதி என்பது பணம் தருவதன்று; நிறைவடைந்த மனம் தருவது.
மகிழ்ச்சி வெளியில் இல்லை. அது உனக்குள் இருக்கிறது என்பதுதான் மனிதன் மறக்கக்கூடாத மகத்தான தத்துவம்.