தமிழில் அச்சான முதல் நூல்?

இந்திய மொழிகளில் முதல் முதல் எழுத்தாக்கப்பட்டது தமிழில், கோவாவில். கோவாவில் அச்சான தமிழ் நூலே தமிழ் மொழியின் முதல் அச்சு நூல். ஆனால், அதைக் கண்டறியும் வரை கொல்லத்திற்கே முதலிடம்.

திருத்தமான அச்செழுத்து உருவாக்கப்பட்டது கொல்லத்தில். இந்திய மொழிகளில் இப்போது அறியப்படும் தமிழ் முதல் அச்சு நூல் அச்சானது கொல்லத்தில். அது ’தம்பிரான் வணக்கம்’.

‘தம்பிரான் வணக்கம்’ ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூலநூல் போர்த்துகீசிய மொழியில். ஆசிரியர் புனித சேவியர் (St. Francis Xavier 1506-1552)

ஸ்பெயின் வம்சாவழிப் போர்த்துகீசிய, கிறித்துவ பாதிரியார் அவர். 1541-இல் இந்தியாவிற்கு வந்து திருவாங்கூர் கடலோரத் தாழ்த்தப்பட்ட மக்களிடத்து கிறித்துவ ஊழியம் ஆற்றினார்.

இந்த நாட்டவர் மொழியை அறிந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். தலைமைப் பாதிரியார் சேவியர் தனக்கு அனுப்பப்படும் துணை ஊழியர்களும் தன்போலிருக்க வேண்டுமென எதிர்பார்த்தார்.

“அதிக புத்திசாலியாயும், மிகு கவனமுள்ளவராயும், தியாகம் செய்பவராயும் உள்ள ஊழியர்களை அனுப்பித் தாருங்கள்” என்று போர்த்துகல் தலைமையை வேண்டினார் அவர்.

தம்பிரான் வணக்கத்தைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். மொழியாக்கம் செய்யப்பட்ட நாள் 20.02.1557, அது அச்சாகிய நாள் 20.10.1578.

***

நன்றி: தமிழ்நாடன் எழுதிய ‘தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்’ நூலிலிருந்து.

04.01.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment